வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவில் புஷ்ப பல்லக்கு திருவிழா

வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-04-04 12:28 GMT
பல்லக்கில் எழுந்தருளி சீதளாதேவி மாரியம்மன்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான 'பாடை காவடி' திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து இன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது..

முன்னதாக பலதரப்பட்ட மலர்களால் பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு  சீதளாதேவி மாரியம்மன் பல்லக்கில் எழுந்தருள செய்யப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக் கலைஞர்கள் மல்லாரி இசை முழங்க அம்மன் புஷ்ப பல்லக்கு வீதி உலா புறப்பட்டது. தொடர்ந்து முக்கிய விதிகள் வழியாக பல்லக்கு வலம் வந்து கோவிலை சென்றடைந்தது.

இந்த நிகழ்வில் நள்ளிரவும் பாராமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News