வீட்டில் புகுந்து பெண்ணிடம் செயின் பறித்த நபர் 24 மணி நேரத்தில் கைது

நன்னிலம் அருகே வீட்டில் புகுந்து பெண்ணை தாக்கி செயின் பறித்த நபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-11 13:33 GMT

கைது செய்யப்பட்ட வினோத்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகம், கடிமருதுகரத்தெரு, மாப்பிளைகுப்பம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவரின் தாய் மலர்கொடி (56 )என்பவருடன் தனது வீட்டில் 09.04.22 அன்று உறங்கிகொண்டிருந்தார். இரவு 12.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டில் புகுந்து மலர்கொடியை இரும்பு ராடால் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க தாலி செயினை அறுத்து சென்றுள்ளார்.

இச்சம்பவம் அறிந்து உடனடியாக சம்பவ இடம் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார். இதுதொடர்பாக நன்னிலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொள்ளையனை பிடிக்க நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.விரைந்து விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர் மேற்படி கொள்ளையில் ஈடுபட்டு வினோத் (26) கீழ உத்திரங்குடி குடவாசல், என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2-சவரன் தங்க தாலி செயினை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News