ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்

ஆபத்தை உணராமல் பேருந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை;

Update: 2022-02-25 10:17 GMT

 மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தை உணராமல் படியில் நின்றும் பக்கவாட்டு கம்பியை பிடித்து தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது.

தற்போது மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போதும் பள்ளி முடியும் போதும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது... மேலும்.நன்னிலம் பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகள் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்திலும் முண்டியடித்து ஏறும் நிலை உள்ளது. மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தை உணராமல் படியில் நின்றும் பக்கவாட்டு கம்பியை பிடித்து தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர்..

மாணவர்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். உயிருக்கு  அபாயம் உள்ளதால், பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து நன்னிலம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல். சரவணன் கூறியதாவது:  பள்ளி நேரத்தில் சிறப்பு பேருந்து களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பேருந்து நேரத்தில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்கினால் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும். எனவே அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Tags:    

Similar News