நன்னிலம் பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

நன்னிலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-05 10:23 GMT

சேதம் அடைந்த நெற்பயிர்களை காட்டும் விவசாயிகள்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பத்தூர், ஆர்ப்பாவூர், திருக்களப்பூர், செல்லூர், இலையூர், கமுகக்குடி, கீழப்பாலூர், வளவநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட சம்பா பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.மேலும், மழை நின்று இரண்டு நாட்களாகியும், மழைநீர் வடியாத நிலையில். தேங்கிய மழை நீரினால் சம்பா பயிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடுத்தொகையே இதுவரை வழங்கப்படாத நிலையில்

தற்பொழுது 10 நாட்களுக்குள் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரினால் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்..

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்... என அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்...

மேலும், இது குறித்து பேசிய விவசாயிகள் பயிர் சேதங்களை முறையாக கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்க வில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினர். 

Tags:    

Similar News