நன்னிலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து கடத்தல்

மணவாளம்பேட்டை பகுதியில் தினமும் மாலையில் நிறுத்தி விட்டு மறுநாள் பேருந்தை கல்லூரிக்கு எடுத்துச் செல்வது வழக்கம்

Update: 2021-09-28 15:03 GMT

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மணவாளம்பேட்டை பகுதியிலிருந்து காணாமல் போன தனியார் கல்லூரி பேருந்து.

நன்னிலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து கடத்தப்பட்ட  3 மணி நேரத்தில் திருச்சி அருகே பிடிபட்டது

நாகப்பட்டினம் மாவட்டம், பாப்பாகோவில் பகுதியிலுளள தனியார் கல்லூரி பேருந்து, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மணவாளம்பேட்டை பகுதியில் ஒவ்வொரு நாளும் மாலையில் நிறுத்தி விட்டு, மறுநாள் காலையில் பேருந்தை எடுத்து மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று எப்போதும் போல கல்லூரி பேருந்தை ஓட்டுநர் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை வந்து பேருந்து ஓட்டுனர் பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை  இல்லாமல் போனதைக்கண்டு  அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, நன்னிலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுகுணாவிடம் அளித்த புகாரின் அடிப்படையில், நன்னிலம் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி, விசாரணையில் திருச்சிக்கும் கரூர்க்கும் இடையே திருப்பராய்த்துறை பகுதியில் பேருந்து  இருப்பதாக  கிடைத்த  தகவலையடுத்து அங்குள்ள, சுங்க சாவடி அருகே பேருந்தை ரோந்து காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அப்போது,  பேருந்தை கடத்திய திருடர்கள் பேருந்தை  நிறுத்திவிட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடிய பேருந்து திருடர்களை காவல்துறையினர்  தேடிவருகின்றனர். காணாமல் போன கல்லூரி பேருந்து மூன்று மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News