நன்னிலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சிறு பாலம் இடிப்பதால் மக்கள் அவதி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சிறு பாலம் இடிப்பதால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

Update: 2022-03-09 03:13 GMT
நன்னிலம் அருகே பாலம் இடிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, ஸ்ரீவாஞ்சியம் பகுதியிலிருந்து மணக்கால் அய்யம்பேட்டை செல்லும் சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக பாலங்களை இடிக்கும் நெடுஞ்சாலைத்துறை எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் பொது மக்களுக்கு மாற்று வழி எதுவும் ஏற்படுத்தித் தராததால் பொதுமக்கள் சாலையில் செல்லும்போது அவதிக்குள்ளாகிறார்கள்..

மேலும், பலர் கீழே விழுந்து மருத்துவமனைக்கு செல்லும் அவலம் நிகழ்ந்துள்ளது.அச்சுதமங்கலம், திப்பனம்பேட்டை , ஸ்ரீவாஞ்சியம்,பூங்குளம்,வீதிவிடங்கன் ,பெரும்படுகை, புதுப்பேட்டை, நெய்க்குப்பை, நாடாக்குடி, தோட்டகுடி, கீரங்குடி, மணக்கால் அய்யம்பேட்டை உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்..

தற்போது இந்த சாலையில், சாலை விரிவாக்கத்திற்காக சிறு, சிறு பாலங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் எந்தவித முன்னேற்பாடும் செய்யாமல் இடிப்பதால், மக்களுக்கு எந்தவித மாற்று வழியும் உருவாக்கித் தராததால், சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிறார்கள்.

இந்த வழியாகத்தான் அப்பகுதி கிராம மக்கள். திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டும், அவசரம் என்றால் கூட ஒரு 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வழியாக சென்ற பொதுமக்கள் இடிக்கப்பட்ட பாலத்துக்கு அருகில் உள்ள வயல் வழி வழியாக கடந்து சென்றபோது அங்கு விழுந்து உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் விரிவாக்கம் செய்யும் போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அதற்கு மாற்று ஏற்பாடு செய்த பிறகுதான் சாலைகளை விரிவாக்கம் செய்வார்கள்.

ஆனால் எந்தவித முன்னேற்பாடும், மாற்று ஏற்பாடும் செய்யாமல் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையில் உள்ள சிறு பாலங்கள் இடித்ததால் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

உடனடியாக நெடுஞ்சாலைத்துறை மாற்று வழி ஏற்படுத்தி விட்டு அதன் பிறகு பாலம் கட்டும் பணியை செய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவர்கள் ,கல்லூரி மாணவ மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், வயதான முதியவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News