குடவாசல் அருகே 'ஒரே பாரதம்- உன்னத பாரதம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;

Update: 2021-10-22 10:00 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள  புதுக்குடி ஊராட்சியில் ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம் நடைபெற்றது. இம்முகாமை குடவாசல் ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம், கொரோனா நோய்த்தடுப்பு, தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சியில் பேசியவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்தியாவிலிருந்து கொரோனாவை ஒழிக்க நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தற்போது நூறு கோடி என்ற இலக்கை அடைந்து வருவதால் விடுபட்டவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள நிகழ்ச்சியில் பேசிய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 75ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் முன்னாள் ராணுவ வீரர் கவுரவிக்கப்பட்டார். தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலக உதவியாளர் அருண்குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News