நன்னிலம் அருகே மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கி நகை கொள்ளை
நன்னிலம் அருகே மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் உள்ள மூதாட்டி 60 வயதுடைய மலர். இவர் கீழ் வீட்டில் வசித்து வந்த நிலையில் இவரது மகன் செந்தில்குமார் மேல் தளத்தில் ஒரே வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று விடியற்காலை மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து முதாட்டியை இரும்பு ராடால் தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அலறல் சத்தத்தில் அவரது மகன் செந்தில்குமார் கிழே வந்து பார்த்த போது அவரது தாயார் மலர் தலையில் இரும்பு ராடால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தது தெரிந்துள்ளது.
ரத்தம் கொட்டிய நிலையில் முதாட்டி மயங்கி கிடைந்துள்ளார். உடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் மரம் நபர்களை தேடி வருகின்றனர்.