தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சார்பாக தேசிய அளவில் 2 நாள் கருத்தரங்கு துவங்கியது.

Update: 2022-04-28 15:04 GMT

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்கியது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சார்பாக ஆத்ம நிர்பார் பாரத் எனும் தேசிய அளவில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்திய கலாச்சார கவுன்சில் மூலம் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். கிருஷ்ணன், ஆந்திர மாநில மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். கட்டிமணி, போபால் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. ஜி. சுரேஷ் மற்றும் சிறப்பு விருந்தினர் மனுகொண்டா ரவிந்திரநாத் உள்ளிட்டவர்கள் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கு நிகழ்வினை துவக்கி வைத்தனர்.

இன்று மற்றும் நாளை இரண்டு நாள் நடைபெறுகின்ற இந்த கருத்தரங்கில்.. இன்று போபால் தகவல்தொடர்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. ஜி .சுரேஷ் இந்தியாவை தன்னிறைவாக மாற்றுவதில் தேசிய அளவில் ஊடகங்களின் பொறுப்பு என்பது குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்..

மேலும் இந்த நிகழ்வில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 56 ஆராய்ச்சியாளர்கள்.. தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News