வலங்கைமான் அருகே ஸ்ரீசாந்தப்ப விநாயகர் காேவில் மஹா கும்பாபிஷேகம்

வலங்கைமான் அருகே 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-02-18 11:29 GMT

வலங்கைமான் அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீசாந்தப்ப விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், அரித்துவாரமங்கலம் கிராமத்தின் வாயு மூலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீசாந்தப்ப விநாயகர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். இவ்வாலயம் பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தனம் செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாசி மாதம் 4- ஆம் தேதி விக்னேஷ் வர பூஜையுடன் துவங்கிய யாகசாலை பூஜை, தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று. மஹா பூர்ணாஹூதியுடன் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து யாத்ரா தானத்துடன் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. பின் சரியாக 10.15 மணிக்கு விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கோபுரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீசாந்தப்ப விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News