குடவாசலில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து சாலை மறியல் போராட்டம்
குடவாசல் அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
குடவாசல் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் குடவாசல் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர் சங்க துணைத்தலைவர் சூர்யா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்