வலங்கைமானில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வலங்கைமான் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 12 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 32,000 ரொக்கம் திருட்டு போனது.;

Update: 2022-01-08 13:51 GMT

கொள்ளை நடந்த வீடு.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, சோத்தமங்கலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ஜெயக்குமார் (வயது 46). இவர் விவசாய வேலை செய்து வருகிறார்.

ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று வெளியூர் சென்ற நிலையில், மர்ம நபர்கள் ஜெயக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடி உள்ளனர்.அக்கம்பக்கத்தினர் நேற்று மாலை வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வெளியூர் சென்ற ஜெயக்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திருட்டு குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.

மேலும், வெளியூர் சென்ற ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரித்ததில், 12 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, 32,500 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது..இதையடுத்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News