நன்னிலம் அரசு மருத்துவமனையில் காதுகேளாதோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் காதுகேளாதோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவமனையில் காதுகேளாதோர் விழிப்புணர்வு முகாம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முகாமில், காதுகேளாமையால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து பிறரோடு உரையாடல் இயலாமல் போவது, தகவல்தொடர்பு தடைபடும் சமூக மற்றும் உணர்வு தாக்கம் போன்றவற்றையும், அதிக ஒலியில் இசை கேட்டல் அல்லது தொலைக்காட்சி பார்த்தால் காது கேளாமை ஏற்படும் என்பதைப் பற்றியும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து துண்டு பிரசுரம் வழங்கினர்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக காது கேட்கும் கருவியைப் பொருத்திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறினர்.
இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் வினோத்குமார், காது நல மருத்துவர் பிரதீபா மற்றும் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.