ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோயில் குரு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் குருவுக்கென்றே தனி சன்னதி அமைந்துள்ளது..
வருடத்திற்கு ஒரு முறை ராசி மண்டலத்தில் உருவானது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நிகழ்வே குரு பெயர்ச்சியாகும்.
அந்த வகையில் குருபகவான் இன்று மாலை சரியாக 6.31 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு பிரவேசம் செய்தார். அந்த நேரத்தில் குருபகவானுக்கு தீபாராதனை நடைபெற்றது.
அதற்கு முன்னதாக இன்று காலை இரண்டு கால யாகபூஜையுடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர்.