ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கடந்த 17.04.2022 அன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா துவங்கியது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா காப்பணாமங்கலம் உப்புகடை தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஆகாய மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற்றது..
கடந்த 17.04.2022 அன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் துவங்கிய சித்திரை திருவிழா, இன்று பாடைக் காவடி, அலகு காவடி மற்றும் பால் குடங்கள் எடுத்து பெருந் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கண் அடக்கம், கை கால் போன்ற உருவங்களை ஆகாய மாரியம்மனுக்கு காணிக்கை அளித்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.