கொரோனா தொற்று .. கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காத கிராம மக்கள்...
ஒரே கிராமத்தை சேர்ந்த 47 பேருக்கு பாதிப்பு.
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா தொற்றின் இரண்டாம் நிலை மிக வேகமாக பரவும் நிலையில்.. திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 47 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், எரவாஞ்சேரி அடுத்த நாலாங்கட்டளை கிராமத்தில், சுமார் 190 குடும்பங்கள் உள்ளது.
இந்த ஊரில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த 3-ஆம் தேதி அரசு அனுமதியின்றி தீமிதி திருவிழா நடந்துள்ளது.
அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது.. இந்நிலையில் நேற்று சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தகவலறிந்த குடவாசல் வட்டார மருத்துவ அலுவலர் Dr.பாலாஜி தலைமையிலான குழுவினர்..120 பேர்களுக்கு கொரானா பரிசோதனை செய்துள்ளனர்..
அதில் ஆண்கள், பெண்கள் உள்பட 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது..
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளை நன்னிலம் அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இடவசதி இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்..
மேலும் கொரோனா பற்றிய விழிப்புணர்வும், கட்டமைப்பும் கிராமப்பகுதிகளில் இல்லாத நிலையிலும், அரசு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் தடையை மீறி திருவிழா நடைபெற்றாதாலும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.."ஒரே கிராமத்தை சேர்ந்த 47 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு... கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காத கிராம மக்கள்...