திருவாரூர் மாவட்டம் பேரளம் திருமீச்சூரில் வரலாற்று சிறப்புமிக்க சக்தி பீடங்களில் முதன்மையானதாக கருதப்படும் லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய லலிதாம்பிகை சமேத மேகநாதசுவாமி ஆலயத்தில் கடந்த 10ஆம் தேதி ரசப்தமி கொடியேற்றத்துடன் தொடங்கிய முதல் நாளில் சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கி பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் புஷ்ப பல்லக்கு புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஒன்பதாவது நாளில் லலிதாம்பிகை அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வில் வேலங்குறிச்சி ஆதீனமான ஸ்ரீ சத்தியஞான மகாதேவ சுவாமி கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இத்தேரோட்டமானது நான்கு முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக கோவிலில் முடிவடைந்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.