வார்டு மறுவரையரையில் குளறுபடி கண்டித்து வாக்காளர்கள் போராட்டம்

மன்னார்குடி நகராட்சியில் வார்டு மறுவரையரை குளறுபடி கண்டித்து வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக போராட்டம் நடத்தினர்.

Update: 2022-02-02 11:37 GMT

மன்னார்குடியில் வார்டு மறு வரையரை கண்டித்து வாக்காளர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி  நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் வார்டு மறுவரையரையில் அரசியல் கட்சியினர் தங்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளை மிரட்டி பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டனர்.

இதன்படி கடந்த 50 ஆண்டுகாலமாக 25வது வார்டாக இருந்து வந்ததை 16  வார்டாக மாற்றி நகராட்சி அதிகாரிகள் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளனர். இந்த வார்டு மறுவரையரையில் பல தெருக்கள் வெவ்வேறு வார்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் தங்களது பகுதிகளை சேர்ந்தவர்களை வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இதனை கண்டித்து  ராஜம்பாளையம் தெருவை சேர்ந்த வாக்காளர்கள் 500க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கபோவதாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,

Tags:    

Similar News