வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா

மன்னார்குடி அருகே வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.;

Update: 2022-04-09 10:35 GMT
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா

வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் கொடியேற்றம்

  • whatsapp icon

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தில் உள்ள ராமர் ஆலயங்களில் மிகவும் புகழ்பெற்றது, வடுவூர் கோதண்டராமர் கோவில். இங்கு ஸ்ரீ ராம நவமி பெருவிழா பத்து தினங்கள் கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு கோவிலில் கொடியேற்றம் நடத்தப்பட்டது. சன்னதியிலிருந்து கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் வலம் வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு முன்னதாக தீட்சிதர்கள் புனித கொடியை வைத்து பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கருடன் சின்னம் வரையப்பட்ட கொடியேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தினமும் இரவு வெவ்வேறு அலங்கார வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடத்தப்படும் கருடசேவை ,சூரிய பிரபை ,சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்ற 17 ம் தேதியன்று தேரோட்டம் நடைபெற உள்ளது .

கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ,வடுவூர் தென்பாதி, வடபாதி நாட்டாமை காரர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோதண்டராமர் வழிபட்டனர்.   

Tags:    

Similar News