மன்னார்குடியிலிருந்து இரண்டு புதிய பேருந்து வழித்தடம் தொடங்கப்பட்டது
மன்னார்குடியிலிருந்து இரண்டு புதிய பேருந்து வழித்தடத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான், பட்டுக்கோட்டை இடையே புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி மன்னார்குடி , பெருகவாழ்ந்தான் சித்தமல்லி மற்றும் பட்டுக்கோட்டை பணிமனையில் இருந்து பட்டுக்கோட்டை , துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை வழியாக சித்தமல்லி , புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை முதல் இரவு வரை இயங்கும் வகையில் 2 புதிய பேருந்து வழித்தடம் உருவாக்கப்பட்டது.
அதனை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ஊராட்சித்தலைவர்.கோ.பாலசுப்ரமணியன் , கும்பகோணம் மண்டல பொதுமேலாளர்.செல்வராஜ், நாகப்பட்டினம் மண்டல வணிக மேலாளர் ராஜா, கும்பகோணம் மண்டல வணிக மேலாளர்.ஸ்ரீதர், ஒன்றியக்குழுத் தலைவர்.மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்.கலைவாணிமோகன், வட்டாட்சியர்.ஜீவானந்தம்,உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பரதிநிதிகள் கலந்து கொண்டனர்.