மன்னார்குடி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் தொழிற்சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-11-29 15:34 GMT

மன்னார்குடி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தற்போது டெல்டா மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யபட்ட நெல் முட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை  கண்டித்து இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு சிவில்சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து மாநில செயலாளர் இளவாி கூறுகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தற்போது குறுவை சாகுபடியில் விவசாயிகளிடமிருந்து 2 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல்செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் பாதித்து மாதக்கணக்கில் தேங்கியுள்ளது. இதனை அதிகாாிகள் சாக்குபோக்கு சொல்லாமல் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்ல முதுநிலை மண்டலமேலாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News