களப்பாலில் தியாகி குப்புசாமி அறக்கட்டளை சார்பில் புதிய நூலகம் திறப்பு
தியாகி குப்புசாமி அறக்கட்டளை சார்பில் அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் திறந்து வைத்தார்.
பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தியாகி களப்பால் குப்புசாமியின் நினைவு அறக்கட்டளையினர் புதிய நூலகம் ஒன்றை இன்று திறந்துவைத்தனர்.
கிராமத்தின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்ற அண்ணல் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தி, கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கிட தியாகியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் மூத்த தலைவர்களில் ஒருவரான களப்பால் குப்புசாமி தன்வாழ்நாளில் பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டவர். அவரது நினைவை போற்றும் வகையிலும், அவர்பிறந்து வளர்ந்த திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் களப்பால் பகுதியில் பஞ்சாயத்துராஜ் தினமான இன்று தியாகி குப்புசாமியின் அறக்கட்டளை சார்பில் புதிய நூலகம் ஒன்றை அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் திறந்துவைத்தார்.
இதனை தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு தியாகி குப்புசாமி நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டது அதனைதொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்