சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார்

மன்னார்குடி அருகே திரும்மகோட்டையில் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2021-05-14 13:30 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் கட்டிட வேலை செய்து வரும் இவர் இன்று வழக்கம் போல் திருமக்கோட்டை பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். வேலை செய்த இடத்தில் இருந்த பழைய தொகுப்பு வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

அந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி பாலசுப்ரமணியம் இடிபாடிகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை போலீசார் உயிரிழந்த பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News