மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம்

மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி கோயில் பகல் பத்து 2ம்நாள் கிளி கண்ணன் அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார்.

Update: 2022-01-05 02:03 GMT

மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி கோயில் பகல் பத்து 2ம்நாள் கிளி கண்ணன் அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி அருள்பாலித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முதல் பகுதியான பகல் பத்து உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று கிளி கண்ணன் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி உலா வந்தார் முற்றவெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நம்மாழ்வார்கள் ஒவ்வொருவராக பெருமாளின் முன்பு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு மாலை மஞ்சள் வெற்றிலை சடாரி மரியாதை செய்யப்பட்டது .

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதேசி நிகழ்ச்சி வருகிற 13-ஆம் தேதி அன்று அதிகாலை நான்கு மணி அளவில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News