நீடாமங்கலம் அருகே பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-12-03 12:03 GMT

நீடாமங்கலம் அருகே மாணவர்கள் தனியார் பஸ்சில் ஆபத்தான பயணம்  செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி கிராமத்தில் தனியார் கல்லூரிமற்றும் அரசு தொழிற்கல்வி நிறுவனமும் உள்ளது. இவற்றில் படிக்கும் மாணவர்கள் அதிகஅளவில் வெளியூரில் இருந்து வருவதால் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மாலை நேரங்களில் கோவில்வெண்ணி பகுதிகளில் பேருந்துகள்நிற்காமல் செல்கின்றது .இதனால் அப்பகுதியில் நிற்கும் தனியார் பேருந்தில் கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் கும்பலாக ஏறுவதால் இடம் இல்லாமல் படிக்கட்டு , ஏணிகளில் ஏறி மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர் . 

மேலும் உயிர் இழப்புகள் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்து வசதிகளையும் அனைத்து பேருந்துகளும் கோவில்வெண்ணியில் நின்று மாணவர்களை பேருந்தில் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags:    

Similar News