நீடாமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை கோவில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2021-12-08 15:15 GMT
கும்பாபிஷேகம் முடிந்ததும் அம்மனுக்கு  தீபாராதனை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு மூன்று தினங்களாக பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

இன்று காலையில் யாகசாலையில் பூர்ணாகுதி நிறைவடைந்த பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்றது .புனித நீர் கொண்ட கடங்களை தீட்சிதர்கள் தலையில் சுமந்தபடி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . அதனை தொடர்ந்து மூலவர் ஸ்ரீஸ்வர்ணாம்பிகைக்கு கலச நீரினால் அபிஷேகம் செய்யபட்டு தீப ஆரதனை செய்யப்பட்டது .

Tags:    

Similar News