ஆலங்குடி அருகே திருவோணமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம்
ஆலங்குடி அருகே திருவோணம் கிராமத்தில் ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடந்தது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீமங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு வலது புறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகள் எழுந்தருளி உள்ளனர்.
இங்கு எழுந்தருளியுள்ள 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில், நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஸ்ரீ சீதா கல்யாண வைபவம் தொடங்கி ஸ்ரீ ராமச்சந்திர பிரபு, சீதா பிராட்டியாருக்கு திருமாங்கல்ய தாரணம் செய்யும் நிகழ்வும், திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்றது.
ஸ்ரீ சீதா கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புடவை, திருமாங்கல்ய சரடு, (மஞ்சள் கயிறு) மஞ்சள் கிழங்கு, குங்குமம் ஆகிய மங்களப் பொருட்களும், பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.