மன்னார்குடி சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது

மன்னார்குடி பழைய தஞ்சை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-01-27 13:29 GMT
மன்னார்குடி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பழைய தஞ்சை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது . கும்பாபிஷேகத்தையொட்டி நான்கு தினங்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம் , லட்சுமி ஹோமம், அக்னி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது. இதன் நிறைவாக நான்காம் காலயாகசாலை பூஜைகள், பிம்பசுத்தி, ரக்க்ஷாபந்தனம் ,நாடி சந்தனாம், மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டது.


பின்னர் புனித நீர் கொண்ட கடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு விமான கலசங்களை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் கருவறையில் அருள்பாலிக்கும் சித்தி விநாயகருக்கு புனித நீர் ஊற்றி மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனையும் காட்டப்பட்டது.

Tags:    

Similar News