ஊரடங்கு: மன்னார்குடியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடல்

மன்னார்குடியில் ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளது;

Update: 2021-04-25 09:45 GMT

ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படும் மன்னார்குடி

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் தமிழகம் முழுவதும் தமிழக அரசு , சார்பில் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திரையரங்குகள் , வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. 

இதைபோல் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இருந்தும் ஒரு சில நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.  மருத்துவமனையில் அதிக கூட்டம் இல்லாமலும், பேருந்து நிலையத்திலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

தேவையில்லாமல் வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சாித்து வருகின்றனர். 

Tags:    

Similar News