மன்னார்குடி சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு
மன்னார்குடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த காந்திரோட்டில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ .3 லட்சம் ரொக்கம் திருட்டு போனது.;
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகின்றன. இந்நிலையில் மன்னார்குடியில் காந்தி சாலையில் முகமது அலியார் என்பவர் பிரபல சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார் . வழக்கம் போல் கடை முடிந்தவுடன் பணியாளர்கள் இரவில் கடை முழுவதும் உள்ள ஜன்னல்களை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விடுவார்கள்.
இதை தொடர்ந்து நோட்டமிட்ட மர்மநபர்கள் இன்று அதிகாலை சூப்பர் மார்க்கெட்டின் முதல் மாடியில் உள்ள இரும்பு ஜன்னல் கம்பியை வளைத்து கடையின் உள்ளே புகுந்து கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ. 3 இலட்சம் ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர். வழக்கம் போல் காலை கடையை திறக்க வந்த முகமது அலியார் கடையில் வேலை செய்யும் பணியாளர்களிடம் சாவியை கொடுத்து கடையை திறந்து பார்த்தபோது பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். பின்னர் சூப்பர் மார்கெட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான ஹார்டு டிஸ்க் மற்றும் ரூ. 3 இலட்சம் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது .