மன்னார்குடி அருகே நடந்த சாலை விபத்தில் போலீஸ்காரர் உயிரிழப்பு
மன்னார்குடி அருகே நடந்த சாலை விபத்தில் கோட்டூர் காவல் நிலைய போலீஸ்காரர் உயிரிழந்தார்.;
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லியோ ஆனந்த் (30).இவர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் நிலையத்தில் காவலர் ஆக பணிபுரிந்து வந்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட 4 நாட்கள் விடுப்பில் தனது சொந்த ஊருக்கு சென்று ,இன்று அதிகாலை பணிக்கு வரும் வழியில் சேரி கிராமத்தின் அருகே அதிகாலை 01.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வேளாங்கண்ணியிலிருந்து திருச்சி சென்ற டூரிஸ்ட் வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
அவரது உடலை கைபற்றி கோட்டூர் காவல்துறையினர் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர் . விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் திருச்சி மாவட்டம் உய்ய கொண்டான் திருமலையை சேர்ந்த ராஜேஷ் (37) என்பவரை கைது கோட்டூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.