மன்னார்குடி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊக்கத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி மன்னார்குடி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2021-12-30 02:15 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள். 

திருவாரூர் மாவட்டம்,  மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனை முன்பு, ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து,  கண்டன முழக்கங்கள் எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை உடனே வழங்கிட வேண்டும், மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் , ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.  

Tags:    

Similar News