பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை அனுமதிக்கமாட்டோம்: கே.எஸ்.அழகிரி

தனியார் மயத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. அதற்காக பொதுத் துறையை தனியார்மயமாக்க கூடாது என்றார் கே.எஸ்.அழகிரி;

Update: 2021-08-26 01:10 GMT

மன்னார்குடியில் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே..எஸ்..அழகிரி

விமானம் நிலையம் தனியார் மயமாக்கபடுவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறோம். ஆனால், பொதுதுறையை தனியாராக மாற்றகூடாது என  காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்..

திருவாருர் மாவட்டம் ,மன்னார்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்ல் பேட்டியில், பன்னாட்டு விமான நிலையங்களை தனியார் நடத்துகிறதா? அல்லது  பொதுத்துறை நடத்துகிறதா? என்பது  பிரச்னை அல்ல. விமானம் நிலையம் தனியார் மயமாக்கபடுவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை . அதற்காக பொதுத் துறையை தனியார்மயமாக்க கூடாது .

மத்திய பாஜக அரசு பொதுத் துறை நிறுவனங்களை விற்க கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது . தனியார் மயத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை  என்பற்காக,  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. ஆர்எஸ்எஸ்   ஒற்றுமையாக உள்ள இந்தியாவை சிதைக்க பார்க்கிறது . வர்ணாசரமத்தை திணிக்க  முயற்ச்சிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தோன்றிய காலத்திலிருந்தே அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி மதத்தையும் கடவுளையும் மதிக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஆனால், மதத்தையும் கடவுளையும் இன்னெருவர் மீது திணிக்க கூடாது என்பது காங்கிரஸ் கொள்கை. அதனால்தான்  ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் .

ஜெயலலிதா மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தெரிந்து கொள்ள , அரசியல் கட்சியை விட பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.  அதிமுக அதற்கு உரிய பதிலை சொல்ல வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என்பது விவாதம் செய்வதற்காகத்தான். அதிமுகவினர் விவாதத்திற்கு பதில் சொல்லவேண்டும் என்றார் கே.எஸ். அழகிரி. . 

Tags:    

Similar News