மன்னார்குடி அருகே செல்போனில் பேசியபடி தடுப்பூசி செலுத்திய செவிலியர்
செவிலியர்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.;
செல்போனில் பேசியபடி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியரின் செயலால் அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பெண் செவிலியர் ஒருவர் செல்போன் பேசிய படியே தடுப்பூசி செலுத்தியுள்ளார். பணி நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக தடுப்பூசியை மாற்றி செலுத்தக்கூடிய ஆபத்தும் உள்ளது.மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்ன விதமான தடுப்பூசி தங்களுக்கு போடப்பட்டுள்ளது என்ற குழப்பமும் ஏற்படும். எனவே, செவிலியர்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்ட சூழலில், செவிலியர் ஒருவர் கவனக்குறைவாக நடந்து கொண்டிருக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.