திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிதாக 3 வகுப்பறை கட்டிடம் திறப்பு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடம் காணொலி மூலம் திறக்கப்பட்டது.;

Update: 2021-11-03 12:19 GMT

கூத்தா நல்லூர் அரசு பள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட பள்ளி வகுப்பறையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றினார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.88.07 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறை கட்டிடம், அறிவியல் ஆய்வக கட்டிடம் மற்றும் நூலக கட்டிடம் ஆகியவற்றை  தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனையொட்டி கூத்தாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன்,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர்.

Tags:    

Similar News