மன்னார்குடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தின கூட்டம்

மன்னார்குடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தின கூட்டத்தில் பெ மணியரசன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-01-03 08:55 GMT

மன்னார்குடியில் நடந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தின கூட்டத்தில் பெ. மணியரசன் பங்கேற்று பேசினார்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வர் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் அரங்ககூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மருத்துவர் பாரதிச் செல்வன் தலைமையில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் காவிரி உரிமை மீட்பு குழு அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பெ.மணியரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது

பஞ்சாப், உத்தரபிரேதசம் உள்ளிட்டமாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.  ஒன்றுமில்லாமல் ஓடிவிடும் . கர்நாடக மாநிலத்தில் மேகதாட் அணை கட்ட கூடாது என  தமிழக விவசாயிகள் போராடியது அது போராட்டம் .ஆனால் தஞ்சையில் பா.ஜ.க.  அண்ணாமலை உண்ணாவிரதம் நடத்தியது அது ஒரு கபட நாடகம் . தமிழ் இனத்தை மதித்து புரிந்து கொண்டவர் நம்மாழ்வார் . தமிழ் இனத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகஅரசாங்கத்திற்கு தமிழகத்திலிருந்து மின்சாரம் வழங்க கூடாது என போராட்டம் நடத்தியவர் நம்மாழ்வார் .

மாற்றம் என்பது ஒருவரின் மனதிலிருந்து தொடங்க வேண்டும் . தமிழர்களின் போர் குணத்தை மலுங்கடித்தார்கள்.  நம்மாழ்வார் வெகு ஜன மக்களின் போராட்டத்தை முன்னெடுத்தவர் .காவிரி டெல்டா மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் .அரசியல் பாகுபடியின்றி போராட்டத்தை முன்னெடுத்தார்கள் . வாக்குகள் வாங்குவதற்காக பாதுகாக்க பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர்கள் எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்கள் .

முதல்வர் மு.க.ஸ்டாலினும் மீத்தேன் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களை விரைவில் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்து வருகிறார் .தமிழ் நாட்டில் நெல் மட்டும் உற்பத்தி செய்யவில்லை காவேரி தண்ணீர் இல்லையென்றால் டெல்டாவில் விவசாயம் கிடையாது .கர்நாடக முதல்வர் மேடையில் பேசுகிறார் மேகதாட் அணை கட்டப்படும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுவழங்கியுள்ளது . எதிர்வரும் 6- ஆம் தேதி மேகதாது அணை கட்டுமானத்திற்கு எதிராக தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றார் .

Tags:    

Similar News