கூத்தாநல்லூரில் மிலாது நபி விழா: இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்
நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழாவான மிலாது நபியை கூத்தாநல்லூர் இஸ்லாமிய மக்கள் கொண்டாடினர்.
நபிகள் நாயகம் பிறந்த திருநாளான`மிலாது நபி' விழாவை உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர் .
உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழ வேண்டும் என்பது நபிகளின் அருட்போதனை. அதனை போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பெருமானார் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று இரவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருக்கள் முழுவதும் மின் நவீன விளக்குகளால் அலங்கரிக்கபட்டு 12-ஆம் நாட்கள் வரை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை பெரியோர்கள் முதல் சிறுவர்கள் ஆண்கள் , பெண்கள் நள்ளிரவு 12.00 மணிவரை தினமும் கேட்டு மகிழ்ந்தனர்.
அதனை தொடர்ந்து நகர்முழுவதும் இளைஞர்கள் நவீன மின்விளக்குகளை கூத்தாநல்லூர் நகர்முழுவதும் போட்டிபோட்டு அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.