மன்னார்குடியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சான்றிதழ் பெற்றார்

மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா, அதற்கான சான்றிதழை பெற்றார்.;

Update: 2021-05-03 05:00 GMT

வெற்றிச் சான்றிதழை பெறுகிறார் மன்னார்குடி திமுக வேட்பாளர்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான  வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கத்தை விட 37614 வாக்குகள் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா பெற்ற மொத்த வாக்குகள் 87602. அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம் பெற்ற மொத்த வாக்குகள் 49988. தொடர்ந்து திமுக வெற்றி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர் சாமியிடம் தனது வெற்றி சான்றிதழை பெற்றார்.
Tags:    

Similar News