ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்
மன்னார்குடியில் மருத்துவ விநாயகர் , ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.;
திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் எம்ஜிஆர் நகரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மருத்துவ விநாயகர், ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று தினங்களில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு இன்று காலை பூர்ணாஹுதி உடன் நிறைவடைந்தது. அதன் பின்னர் புனித நீர் அடங்கிய குடங்களை கோவில் தீட்சிதர்கள் தலையில் சுமந்தபடி எடுத்து வந்து கோவிலை அடைந்தனர். அப்போது விசேஷ தீபாராதனை செய்தனர். பின்னர் புனித நீரை கோபுர விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர், அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ஸ்ரீ சீரடி சாய்பாபாக்கு அபிஷேகம் செய்யப்பட்டது . கும்பாபிஷேகத்தில் மன்னார்குடி அதிமுக சட்ட மன்ற வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம், மருத்துவர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காலம் என்பதால் பக்தர்கள் முக கவசம் அணிந்து குறைவான பக்தர்களே வருகை புரிந்தனர் .