மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ 2 லட்சத்தில் மருத்துவ உபகரணம் : கஜா நண்பர்கள் குழு வழங்கல்
மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ 2 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை கஜா நண்பர்கள் குழு வழங்கியது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கஜா நண்பர்கள் குழு 2 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி, மாஸ்க் , சானிடைசர் , கையுரை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தலைமை மருத்துவர் விஜயகுமாரிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி , காவல் துணை கண்கானிப்பாளர் இளஞ்செழியன் , கஜா நண்பர்கள் குழு மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.