மன்னார்குடி அரசு போக்குவரத்து கழக தி.மு.க. தொழிற்சங்கத்தினர் மோதல்
மன்னார்குடியில் திமுக தொழிற்சங்கத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர்.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடையே தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள்கொடுத்து வருவதாக பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மன்னார்குடியில் தி.மு.க. அலுவலகத்தில் எல்.பி.எப் தொழிற்சங்க அவசர ஆலோசனை கூட்டம்நடைபெறுவதாக பொறுப்பாளர் முருகானந்தம் அழைப்பு விடுத்ததின் பேரில் ஒரு தரப்பு எல்.பி.எப். நிர்வாகிகள் வரமுடியாது என தெரிவித்ததால் நிர்வாகி சதீஸ் , முருகானந்தம் ஆகிய இருவரும் அரசு பேருந்து பணிமனை வளாகத்தில் பேருந்தை இயக்காமல் நிறுத்திவிட்டு அடிதடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .
இருவரும் காயத்துத்துடன் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.