மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் காணொலி மூலம் திறப்பு
மன்னார்குடியில் கட்டி முடிக்கப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.;
திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் ரூ. 2 கோடியே 4 இலட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.இதனை சென்னையில் இருந்தபடியே முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , பாராளுமன்ற உறுப்பினர்கள் தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ,நாகை எம்.செல்வராசு , மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன் , மாரிமுத்து உள்ளிட்ட வருவாய்துறை அதிகாிகள் பலர் கலந்துகொண்டனர் .