மன்னார்குடியில் சிறந்த எழுத்தாளருக்கு இலக்கிய விருது வழங்கும் விழா
மன்னார்குடியில் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை சார்பாக இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.;
எழுத்தாளர் முனைவர் சீர்காழி வி.இராம்தாஸ் தேர்ந்தடுக்கப்பட்டு, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலையையும், இலக்கிய விருதும் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி செங்கமலத்தாயர் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் மற்றும் படைப்பாளர் தேர்ந்தேடுத்து இலக்கிய விருதும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிளியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்க்கான இலக்கிய விருதுக்கு எழுத்தாளர் முனைவர் சீர்காழி வி.இராம்தாஸ் தேர்ந்தடுக்கப்பட்டு, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலையையும், இலக்கிய விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழா அக்கல்லூரி தாளாளர் டாக்டர் திவாகரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வக்கீல் தமிழரசன், அக்ரி ராஜேந்திரன், சதாசிவம் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி மாணவியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.