மன்னார்குடியில் பழைமை வாய்ந்த கனகம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மன்னார்குடியில் உள்ள பழைமை வாய்ந்த கனகம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கனகாம்பாள் தெருவில் உள்ள பழைமை வாய்ந்த கனகம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி நான்குகால யாகசாலை பூஜைகள் ஏராளமான சிவாச்சாரியார்களைக்கொண்டு நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், லட்சுமிஹோமம், அக்னிஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதன் நிறைவாக 4-ம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹூ தீபாரதனை நடைபெற யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தினை வலம் வந்து கோபுர விமான கலசங்களை அடைந்து சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
இதனை தொடர்ந்து விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.