மன்னார்குடியில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை திருட்டு
மன்னார்குடியில் கசாயத்தில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் 10 பவுன் நகையை வேலைக்கார பெண் திருடினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அசேஷம் பகுதியில் வாஞ்சிநாதன் நகரில் வசித்து வருபவர் ஜெயமணி (70) இவரது கணவர் கனக சபாபதி இறந்துவிட்டார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர் . இதில் 4 பேருக்கு திருமணமாகி கணவருடன் வெளியூர்களுக்குசென்றுள்ளனர். கடைசி மகளான பிரபா தனது கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவருவதால் . தாயார் ஜெயமணி மகள் பிரபாவின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார் .
இந்நிலையில் ஜெயமணி தங்கியுள்ள வீட்டிற்கு புதிதாக ருக்மணிபாளையம் தெருவில் உள்ள ஒரு பெண்தனது முகவரியை முழுமையாக தெரிவிக்காத நிலையில் இரண்டு நாட்களாக வேலை பார்த்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்ஜெயமணிக்கு உடல்நிலை சரி இல்லாததால் வேலைக்கார பெண் கசாயம் வைத்து தருவதாக கூறி கசாயத்தில் மயக்க மருந்து கொடுத்து வீட்டில் இருந்த 10 பவுன்நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இச்சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.