மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பவித்ர உற்சவம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் கோதண்டராமர் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகும். வைணவ கோவில்களில் வருடம் முழுவதும் செய்யப்படும் பூஜை முறைகளில் தெரிந்தோ தெரியாமலோ நிகழும் தவறுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வருடத்திற்கு ஒருமுறை பவித்ர உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில் வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பவித்ர உற்சவம் நடத்தப்பட்டது. வருடம் முழுவதும் செய்யப்படும் .அனைத்து பூஜைகளும் இந்த தினங்களில் நடத்தப்பட்டது. கோவிலிலிருந்து கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் புறப்பட்டு உலா வந்தார். வண்ணமயமான பவித்ர மாலை அணிந்து எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் வணங்கினர்.
பின்னர் கோவிலில் யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. யாக சாலையில் யாக பேரர் சாமியை எழுந்தருள செய்து பூஜை செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாகுதி செய்யப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .