அம்மனுக்கு சிம்மவாகனம் வழங்கிய பொதுமக்கள்

Update: 2021-04-10 06:45 GMT
  • whatsapp icon

திருவாரூர் மாவட்டம் வாழாச்சேரியில் பழைமை வாய்ந்த ராஜ காளியம்மன் ஆலயத்திற்கு சுவாமி வீதியுலா செல்வதற்கு முதன்முறையாக கிராம மக்கள் செலவு செய்து கோவிலுக்கு சிம்மவாகனத்தை வழங்கினார்கள் .

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வாழாச்சேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ராஜகாளியம்மன் திருவிழா நேரத்தில் உற்சவகாளியம்மன் வீதியுலா செல்வதற்காக முதல்முறையாக சிம்ம வாகனத்தை கிராம மக்கள் சொந்த செலவில் பனங்காட்டாங்குடி கிராமத்தில் புதிதாக செய்து அதற்கு உண்டான பூஜைகள், பரிகாரங்கள் செய்து வாழாச்சேரி கிராமத்திற்கு எடுத்து சென்றனர் .

Tags:    

Similar News