மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மாடுகளுக்கு இலவச வைக்கோல்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மாடுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் சேவை சங்கம் சார்பில் வைக்கோல் இலவசமாக வழங்கப்பட்டது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.
இந்த மாடுகளுக்கு தேவையான வைக்கோல் இல்லையென கடந்த 5 நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் , பேஸ்புக் முகநூலில் வைக்கோல் தேவை என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மன்னார்குடியில் உதயநிதி ஸ்டாலின் சேவை மையத்தின் சார்பில் இலவசமாக மாடுகளுக்கு தேவையான வைக்கோல்களை அரசு மாவட்ட வழக்கறிஞர் கலைவாணன், வழங்கினார்.
இதில் சேவை மையத்தின் நிர்வாகிகள் பிரசன்னா , மதி , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.