மன்னார்குடி அருகே ஸ்ரீ சங்கரா அகாடமி சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்
இதில் 300-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்யப்பட்டதில், 60-க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்
திருவாரூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் , ஸ்ரீ சங்கரா அகாடமி மற்றும் மனிதம் லயன்ஸ் கிளப் பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் கண்சிகிச்சை முகாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலநத்தம்கிராமத்தில் நடைபெற்றது.
முகாமினை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம்பாலு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .இம்முகாமில் திருமக்கோட்டை , மேலநத்தம் , ஆவிக்கோட்டை , தென்பரை, பாலக்குறிச்சி , நல்லூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.இவர்களை அரவிந்த் கண் மருத்துவமனைமருத்துவர்கள் பரிசோதனை செய்தனர், இதில் 300-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 60-க்கும் மேற்பட்டோர் இலவசஅறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். சங்கரா அகாடமி ஒருங்கினைப்பாளர் கண்ணன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் .