நீடாமங்கலத்தில் கண் சிகிச்சை முகாம்: 200க்கும் மேற்பட்டோர் பயன்

நீடாமங்கலத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர் .

Update: 2022-04-22 13:45 GMT

கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோர். 

வண்டாம்பாளையம் லயன்ஸ் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஸ்ரீமான் பூண்டி ஐயா நினைவாக,    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கண் நோய், கருவிழியில் புண், நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மற்றும் கண்ணில் வேறு ஏதாவது பாதிப்புகள், பார்வை குறைபாடுகள் இருந்தால், இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த, சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.எம் .பி .துரைவேலன், நிர்வாகிகள் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News